குழப்பியடித்த கமல்.. அதிருப்தியான திமுக.. ஒரு ராஜ்யசபா சீட்டின் பின்னணி இதான்..!
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கு கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கோவை, தென் சென்னை என இரண்டு தொகுதிகளை திமுகவிடம் முதலில் கேட்டதாகவும், ஆனால் திமுக தரப்பில் ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தரப்பில் நிலைப்பாடை மாற்றி, ஒரு மக்களவை. ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால், திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், பின்னர் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.