விஜய் Style-ல் குட்டி ஸ்டோரி சொன்ன கமல்ஹாசன்..அதுவும் எங்கே தெரியுமா ? | Kamal Haasan

Update: 2023-09-23 02:54 GMT

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொண்டர்கள் மத்தியில் ஒரு குட்டிக்கதை கூறினார். அண்மையில் சீனாவுக்கு சென்றிருந்த போது, அங்கு டிக்கெட் கவுண்டரில் இருந்த சீன ஊழியரிடம் ஆங்கிலத்தில் பேசியதாக கூறினார். அதற்கு, செல்போனில் வாய்ஸ் மூலம் பேச வைத்த அந்த ஊழியர், சீன மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு, செல்போன் மூலமாகவே ஆங்கிலத்தில் பதிலளித்ததாக தெரிவித்தார். அது போல், இந்தியாவிலும் நடக்கும் என்ற கமல்ஹாசன், டெல்லியில் இருந்து ஹிந்தியில் கடிதம் போட்டால், ஸ்கேன் செய்யும் போது தமிழில் பதில் வரும் என்றார். இந்தி மொழி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை, தமிழ் வாழவேண்டும் என்றுதான் சொல்வதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்