விசிக தலைமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2024-08-30 13:08 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள அ.வாசுதேவனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடிக்கம்பத்தை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர். இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக விசிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல், தடுக்கும் வகையில் 836 காவலர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் குவிக்கப்பட்டனர்.

மேலும் 3 வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறுவதாக விசிக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்