கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. ஆறுதல் சொன்னதும் கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை | Kamal Haasan

Update: 2024-06-23 16:59 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ஆறுதல் தெரிவித்தார். அந்த கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்- வடிவுக்கரசி தம்பதி உயிரிழந்த நிலையில், அவர்களின் 3 பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. அவர்களை சந்தித்த கமல்ஹாசன், எதற்கும் கவலைப்பட வேண்டாம், நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். எந்த உதவி தேவைப்பட்டாலும், உதவ தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்