"பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்" வெளியான புது தகவல்

Update: 2023-08-05 01:54 GMT

பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு நிதிஉதவி வழங்கப்படுமென மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி சோமு, பத்திரிகையாளர்களுக்கான நிதி உதவி, இலவச வீடு அல்லது வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர், பத்திரிகையாளர்கள் நலத்திட்டத்தின் கீழ் நோய் அல்லது விபத்தால் பாதிக்கப்படும் அல்லது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருமுறை நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார். மத்திய மாநில அங்கீகார அட்டை பெறாத பத்திரிகையாளர்களுக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனையோ, சலுகை விலையிலான வீடுகளோ அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்