ஆந்திராவின் அடுத்த CM யார்? - ரிப்போர்ட்டை பார்த்தபின் மாறிய ஜெகனின் பாடி லாங்குவேஜ்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வரும் ஐபேக் நிறுவன ஊழியர்களை, அக்கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் பணிகளுக்காக வியூகம் வகுத்து கொடுத்த ஐபேக் நிறுவன பிரதிநிதிகளுக்கு தனது நன்றியை தெரிவித்தார். பின்னர், வரும் ஜுன் 4ஆம் தேதி வெளிவரும் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்திலும், மக்களவையிலும் கடந்த ஆண்டை விட அதிக இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சி நடத்தினோம்... வரும் ஐந்து ஆண்டுகளில், அதைவிட சிறப்பாக ஆட்சி நடத்துவோம் என்றும் கூறினார்.