இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் முன்னணி தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தியாவில் சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீட்டுத் தடத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி
இந்தியா, சிங்கப்பூருக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் சிங்கப்பூர் தொழில்துறை தலைவர்கள் ஆற்றிய பங்கை பாராட்டினார்.
இந்தியாவுடனான அவர்களின் ஒத்துழைப்பை மேலும் எளிதாக்கும் வகையில் சிங்கப்பூரில் INVEST INDIA அலுவலகத்தை அமைப்பதாக அறிவித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளதாக தெரிவித்த பிரதமர்,
இந்தியாவின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சிக் கதை, அதன் திறமை மற்றும் விரிவான சந்தை வாய்ப்பு பற்றி குறிப்பிட்டார்.