ஈபிஎஸ்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-11-09 01:45 GMT

அதிமுக பெயரில் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த‌து. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொது செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கே.சி.பழனிசாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்