`இந்தியா கூட்டணியில் இருந்து மறுத்ததால் சோரன் கைது` - கார்கே ஆவேசம்

Update: 2024-04-22 03:00 GMT

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற மறுத்ததால்தான் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை மோசடி வழக்குகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து ஹேமந்த் சோரன் விலகினார். இந்நிலையில் ஹேமந்த் சோரனின் கைதை கண்டித்து ராஞ்சி நகரில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இந்தியா கூட்டணியில் இருந்து வௌியேற மறுத்ததால்தான் ஹேமந்த் சோரன்

கைது செய்யப்பட்டதாக மல்லிகார்ஜூனே குற்றம்சாட்டினார். ஹேமந்த் சோரன்

தைரியமானவர் என்றும், பாஜகவிடம் தலைவணங்குவதை விட மேல் என்று

சிறைக்கு சென்று விட்டதாகவும்

மல்லிகார்ஜூன தெரிவித்தார். பழங்குடியின

மக்களை பயமுறுத்துவது தொடர்ந்தால்

பாஜக அழிந்து விடும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே எச்சரித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்