ஹரியானா தேர்தல்..! வாக்காளர்களை கவரும் காங்கிரஸின் 7 வாக்குறுதிகள்! | Haryana Election

Update: 2024-09-18 16:41 GMT

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், இது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தேர்தல் வாக்குறுதி அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். அதில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மூத்த குடிமக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுமெனவும், பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், காலியாக உள்ள 2 லட்சம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுமெனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்