5 காலி பணியிடங்களுக்கு குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்.. பதறவைக்கும் வீடியோ

Update: 2024-07-12 03:12 GMT

குஜராத்தில், 5 பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது...

குஜாரத்தில் இயங்கி வரும் வேதிப்பொருள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் 5 பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஒரே சமயத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் நிலவியது. குறிப்பாக படிக்கட்டில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு இளைஞர்கள் கீழே விழும் அளவிற்கு கூட்டம் காணப்பட்டது. இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, மோடியின் ஆட்சியில் வேலையின்மையின் வெளிப்பாடு என விமர்சித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்