"இந்த போராட்டத்தில் ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறவேண்டும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வை அகற்ற முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில், முன்னாள் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் முழு வெற்றி என்றும், ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி இறங்கி போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக குழந்தைகளை பார்த்துக்கொள்ள முதல்வரும், திராவிட மாடல் அரசும் இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளதாக, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.