சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றுள்ளாார். ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஈபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கியதால் மனுவை திரும்பப்பெற அனுமதிக்குமாறு தரப்பில் ஈபிஎஸ் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.EPS withdrew the case of ``OPS matter..''