``புழல் சிறையிக்குள் இருந்து அவர் வீடியோ காலில் பேசினார்.. அதிர்ச்சி'' - ஈபிஎஸ் திடுக் தகவல்

Update: 2024-07-03 10:43 GMT

தமிழக சிறைச்சாலைகள் தற்போது பாதுகாப்பாக போதைப் பொருள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டதா? என்ற சந்தேகம், மக்கள் மனதில் எழுந்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம், தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே, மெத் சரக்குக்கான பிக்கப் பாயிண்டை அமைத்துள்ளதாகவும்,

போதைப்பொருள் விற்பனை குறித்து சிறையில் இருந்தவாறே தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரிகள் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சிறைவாசி யார் யாருக்குப் பேசினார்? யார் அவருக்கு மெத்தபட்டமைன் விநியோகித்தது? அதற்கு பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிந்து,

மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்