மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் பலியானவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்... இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் துரிதமாக எடுக்க வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரயிலில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமெனவும், ரயில் தீ விபத்தில் இறந்த பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும், காயமுற்றோருக்கு மத்திய - மாநில அரசின் நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்...