சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல் துறை மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற சூழல் நிலவுவது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை காத்திடவும் , தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...