பரபரப்பு குற்றச்சாட்டு... உடனே இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2024-05-11 03:32 GMT

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் முன்பே வெளியிடுவது இல்லை என்றும்,

தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்த நிலவரத்தை உடனடியாக வெளியிடுவது இல்லை என்றும் இந்தியா கூட்டணி சேர்ந்த தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், அந்த கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளதால், வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள் நன்கு அறிவார்கள் என தெரிவித்துள்ளது.

வாக்குகள் எண்ணும்போது EVM-ல் பதிவான வாக்குகளும் 17சி படிவத்தோடு வேட்பாளர்கள், அவரது முகவர்களின் முன் சரிபார்க்கப்படும் என்றும், எனவே வாக்குப்பதிவு தரவுகளில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம் தாமதமாக வெளியிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தரவுகள் Voter Turn out செயலியில் எப்போதும் கிடைக்கப்பெறுகிறது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

எனவே, மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்காமல் விலகி இருப்பதுடன் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்