குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராணி மேல்புறம் சந்திப்பு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏறிய வேட்பாளர் ராணி பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகளின் கன்னத்தை கிள்ளி துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்... மேலும் சாலைகளில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ பயணிகளிடம் தனக்கு ஆதரவு திரட்டினார்... அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், குமரி பாராளுமன்ற வேட்பாளர் பசிலியான் நசரேத் ஆகியோரும் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர்...