பல கோடி ரூபாய் நஷ்டம்.. ஈபிஎஸ் காட்டம்

Update: 2024-08-05 14:00 GMT

நெசவாளர்களுக்கு தரமற்ற நூல்களை வழங்கி நெருக்கடியை ஏற்படுத்தி வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி நிலைமையை சமாளித்து வருவதாக ஈபிஎஸ் விமர்சித்துள்ளார். இதேபோல், நடப்பு கல்வி ஆண்டில், 4 செட் இலவச சீருடைக்கு பதில், 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகச் தகவல் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுவதாக தெரிவித்துள்ளார். குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்