ஆலந்தூரில், திமுக திண்ணை பிரச்சாரத்திற்கு சென்ற வீட்டில் இருந்த புதுமண தம்பதிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்தினார். கோவூர் பகுதியில் திமுக திண்ணை பிரச்சாரத்தை தொடங்கியது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் இருப்பது தெரிந்தவுடன் வீட்டிற்குள் சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். அப்போது திமுக அரசு செய்த சாதனைகளை திண்ணையில் அமர்ந்தவாறு அங்கிருந்த பெண்களிடம் எடுத்துரைத்தார். அப்போது மக்களும் அமைச்சர்களிடம் மனு அளித்தனர்.