வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது தேர்தல் அதிகாரிகளிடம் பிரச்சனை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேரை விடுவித்து காட்பாடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அதிமுகவினர் பிரச்சனை செய்ததாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 5 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு உள்ளிட்ட 5 பேரை விடுவித்து, நீதிபதி ஜெய்கணேஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.