#BREAKING || முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து காங். முதல்வர்கள் எடுத்த முடிவு

Update: 2024-07-23 16:24 GMT

டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு. மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களும், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் வரும் 27-ம் தேதி பிரதமர் தலைமையில், நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்