பாரம்பரிய தொகுதிகளில் களமிறங்கும் ராகுல்.. பரபரக்கும் தேர்தல் களம்

Update: 2024-05-14 02:24 GMT

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளில் ஒன்றான ரேபரேலியில், ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் வரும் 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரே பரேலி தொகுதி உடனான தங்கள் உறவு 100 ஆண்டுகள் பழமையானது என்று கூறினார். நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், அரசியல் சாசனத்தை அழிக்க நினைப்பதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இதை பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பேசி வருவதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் பட்டியலை தயாரித்து ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண்ணை தேர்வு செய்து, அவர்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரவு வைப்போம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்