"நீட் தேர்வு முறைகேடுகள்.. இந்தியா கூட்டணி ஆக்‌ஷன் எடுக்கும்" - காங்கிரஸ் எம்பி கெளரவ் கோகோய் பேச்சு

Update: 2024-06-13 10:13 GMT

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளின் மீது பாஜக அரசின் அணுகுமுறை பொறுப்பற்றதாக உள்ளது என குற்றம் சாட்டினார்... 24 லட்சம் மாணவர்களை பாதித்த இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுத்தார்... தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையில் எந்த விசாரணையும் நியாயமானதாக இருக்க முடியாது என விமர்சித்த அவர், நீட் ஊழலில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பிரதமர் மோடி பதவியேற்பு விழாக்களில் கலந்து கொள்வதிலும், வெளிநாட்டுப் பயணங்கள் செய்வதிலும் மும்முரமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்...

மாணவர்களுக்கான இந்த பிரச்சனையை இந்தியா கூட்டணி கையில் எடுக்கும் என்று உறுதியளித்த அவர் அரசை மண்டியிட வைக்கவும் மாணவர்களிடம் பதில் சொல்ல வைக்கவும் இந்தியா கூட்டணியிடம் தற்போது போதுமான பலம் உள்ளது என தெரிவித்தார்... நாடு முழுவதும் தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசும் ஜூன் 4 ஆம் தேதி நீட் முடிவுகளை அறிவிப்பதன் மூலம் அவர்கள் எந்த விவாதத்தையும் தவிர்க்க விரும்பினர் என்பதையே இது காட்டுக்கிறது என கெளரவ் கோகோய் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்