"உங்களுக்கு மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?.. நீங்க கேட்டீங்க.. அதான் இந்த திட்டம்"

Update: 2024-08-09 08:26 GMT

"மேலைநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி உள்ள மாநிலமாக தமிழ்நாடு உயரும்". வரவேற்புரையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பெயரை குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின். "இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு நேற்று இரவே வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க உத்தரவிட்டு விட்டேன்". "நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்". "சில திட்டங்கள் தான் வரலாற்றில் பெயரை சொல்லும் திட்டமாக இருக்கும்". "இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க கோவையை தேர்ந்தெடுக்க காரணம், என் பாசமான மக்கள் கோவையை சேர்ந்தவர்கள்". "தொழில் துறையில் சிறந்த மாவட்டம் கோவை. தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இங்கு உள்ளன". "மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக் கூடிய திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடங்கி வைத்து வருகிறது". "திராவிட மாடல் அரசு என்றாலே அது சமூக நீதிக்கான அரசு தான்". "பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவதில் பார்த்து பார்த்து செய்கிறோம்". "முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்தே பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு தான்". "6 - 12 வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்". "புதுமைப் பெண் திட்டத்தை பார்த்து மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது". "நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து மாணவர்கள் கல்வி பயில உருவாக்கிய திட்டம்". "விழா நடைபெறும் இந்த அரசுக்கல்லூரி 173 ஆண்டுகள் பழமை வாய்ந்தது". "மேலைநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி உள்ள மாநிலமாக தமிழ்நாடு உயரும்". "அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் - இதுதான் என்னுடைய கனவு". "மாணவர்களின் கல்விக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அதற்கு உறுதுணையாக நான் இருக்கிறேன்". "உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட, நான் அதிகம் வைத்துள்ளேன்"."உங்கள் வெற்றிக்கு பின்னால் என்னுடைய திராவிட மாடல் இருக்கிறது. மறந்துவிட வேண்டாம்".

Tags:    

மேலும் செய்திகள்