ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் பிறந்த நாளை ஓட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலைதளங்களில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். ஹேமந்த் சோரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். பலமான தடைகளை எதிர்கொண்ட போதும், மக்களின் உரிமைகளுக்காக போராடும் தங்களின் மனவுறுதி அசைக்க முடியாதது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் என்றும், தாங்கள் இதே வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து வழிநடத்த விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்...