சென்னையில் D.K.S மீட்டிங்..."சொந்த கட்சியா இருந்தாலும் சமரசம் கிடையாது" - காங். தலைவர் அதிரடி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனே தங்களுக்கு முக்கியம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செல்வப் பெருந்தகை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டு மக்களின் நலனே தங்களுக்கு முக்கியம்; அதில் எந்த விதமான சமரசமும் கிடையாது என்று கூறினார்.