முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்ததாக தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு. 3 ஆண்டுகளாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வைகை செல்வன் மனு. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை விளக்கம். காவல் துறை விளக்கத்தை ஏற்று வைகை செல்வன் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்...