சென்னை அருகே பள்ளி மேற்கூரை பூச்சு விழுந்து மாணவிகள் காயம் - டிடிவி தினகரன் கண்டனம்
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் மாணவிகள் காயமடைந்த விவகாரத்திற்கு, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து பதிவிட்ட அவர், பள்ளிக்கல்வித்துறை காட்டும் அலட்சியப் போக்கால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு கட்டடங்களை சீரமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்...