தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின்
குடும்பத்தினருக்கு சொந்தமான ஹெரிடெஜ் ஃபுட்ஸ்
நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து நாட்களில் 55
சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு, ஜூன் 3இல், 424 ரூபாயாக இருந்த பங்கு விலை, நேற்று 661 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 535 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
அவரின் மகன் லோகேஷின் சொத்து மதிப்பு 237 கோடி
ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.