அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு...கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சாட்சியம்

Update: 2023-09-01 02:27 GMT

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சாட்சியம் அளித்துள்ளார். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட செம்மண் குவாரி வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்றைய தினம் கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் கந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை நடைபெறுமன நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்