#Breaking|| தலைவர் தேர்வில் I.N.D.I.A. கூட்டணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஒரு கல் பல மாங்காய்கள்..!

Update: 2023-09-01 07:18 GMT

ஒருங்கிணைப்பாளர் தேர்வு, 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்படலாம் என தகவல்

ஒருங்கிணைப்பு குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்ப

இந்தியா கூட்டணியின் இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம், மும்பையில் இன்று நடைபெறுகிறது...

இன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை, எமது செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்கலாம்...

'இந்தியா' கூட்டணியின் 2வது நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்படலாம் என தகவல்

'இந்தியா' கூட்டணியின் லோகோ இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது

லோகோ வெளியீட்டிற்கு பிறகு, கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்

இந்திய கூட்டணியின் இரண்டாவது நாள் கூட்டம்.

கூட்டணியின் லோகோ இன்று வெளியீடு.

எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று காலை இந்திய கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியின் லோகோ என்ற காலை 10:30 மணி அளவில் வெளியிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியின் முறையான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

இந்திய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, கூட்டணியை வழிநடத்துவதற்கான 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது, இந்திய கூட்டணியின் அஜெண்டா, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியின் சார்பில் தொகுதி பங்கிட்டை எவ்வாறு மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்தியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூட்டணியின் சார்பில் அதிகாரப்பூர்வமான 10 பேர் கொண்ட செய்தி தொடர்பாளர்களை நியமிப்பது தேர்தலில் கூட்டு பிரச்சாரம் மேற்கொள்வது, கூட்டணிக்கான அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

தொகுதி பங்கீட்டை பொருத்தவரை உள்ளூர் அளவில் இருக்கக்கூடிய சூழல் கலவை மற்றும் கட்சிகளின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்யப்பட வேண்டும் என்பது மாநில கட்சிகளின் கருத்தாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுக்கு பின்னர் இந்திய கூட்டணியின் சார்பில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு இடையே இன்று மதியம் இரண்டு மணிக்கு இந்த இந்திய கூட்டணியை சேர்ந்த தலைவர்களுக்கு மதிய விருந்தும் அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்