பல்வேறு மாநிலங்களில் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளான நேற்று வரை 12 வேட்பாளர்களைத் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால் 12 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த 9 பேர், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.