பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பா.ஜ.க நிர்வாகிகள் மீது பழனி கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. மலைஅடிவார காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், ஜகாத் தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.