அருணாச்சல பிரதேசத்தில் யார் முதல்வர்? நாளை பாஜக எடுக்க போகும் முடிவு

Update: 2024-06-11 14:38 GMT

அருணாசல பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தருண் சுக் ஆகியோரை மேலிட பார்வையாளர்களாக பாஜக நியமித்துள்ளது. நாளை நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் பெமா காண்டுவே மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்