"ஒரே தீர்ப்பால் உடைந்த பாஜக-வின் பிளான்.." - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
மக்களவை தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதை பாஜக விரும்பவில்லை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருசேத்ராவில் வாகன பேரணியில் ஈடுபட்டு, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சிறையில் இருந்து நேரடியாக வந்து மக்களை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். சிறையில் இருந்த 50 நாட்களில் 5 கிலோ எடை குறைந்ததாகவும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் 16ஆம் தேதி அறிவித்த நிலையில், 21 ஆம் தேதி, தான் கைது செய்யப்பட்டதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதை விரும்பாமல், கெட்ட உள்நோக்கத்துடன் பாஜக செயல்பட்டதாக குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக