மகனுக்காக பிரச்சாரம் செய்யும்போது அமைச்சர் KN நேருவுக்கு மயக்கமா..? - அதிர்ந்த தொண்டர்கள்

Update: 2024-03-27 09:18 GMT

அமைச்சர் கே.என்.நேரு, பிரச்சார வாகனத்தில் நின்றிருந்த போது மயக்கம் வருவதாக கூறி இறங்கிச் சென்ற சம்பவம் பொது மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், இன்று காலை கொசூர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் வாகனத்தில் நின்றபடி பேசிக் கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, பாதியிலேயே பேச்சை நிறுத்தி, மிகவும் சோர்ந்த குரலில் தனக்கு மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறினார். பின்னர் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியவிட்டு,அங்கிருந்து கிளம்பிச் சென்றார். கே.என். நேரு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து, அருண் நேருவும் ஓரிரு வரிகளுடன் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார் 

Tags:    

மேலும் செய்திகள்