அண்ணாமலை குறித்து சந்திரபாபு நாயுடு மகன் சொன்ன வார்த்தைகள்

Update: 2024-04-12 02:26 GMT

கர்நாடகாவில் ஐ.பி.எஸ்‌. அதிகாரியாக, சிங்கமாக இருந்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ் கூறினார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோவை பீளமேடு பகுதியில் நாரா லோகேஷ் பிரச்சாரம் செய்தார். அப்போது, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்‌. அதிகாரியாக சிங்கமாக இருந்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறினார். கோவையின் வளர்ச்சிக்கு, ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி மையம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். கோவையில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற வைப்பது கோவை மக்களின் பொறுப்பு என்றும், அவர் பிரதமரிடம் நேரடியாக பேசி கோவையை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்றும் நாரா லோகேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்