மறைமலை நகரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்ட வாய்ப்பிருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளர்.
சட்டப்பேரவையில், செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி, மறைமலைநகரில் அரசு பெண்கள் மேல் நிலையப்பள்ளியை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது ஆறு வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். மேலும் சி.எஸ்.ஆர் நிதியின் அடிப்படையில் 3 வகுப்பறைகள் கூடுதலாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். மறைமலைநகரில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டுவதற்கு வாய்ப்பு இருப்பின் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.