தேசிய ஹிந்தி மொழி தினத்தை முன்னிட்டு ஹிந்தி மொழி வைர விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
இந்த ஆண்டு ஹிந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட வைர விழாவை கொண்டாட இருப்பதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
ஹிந்தி பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளது இருப்பினும் இன்று ஹிந்திக்கும் எந்த உள்ளூர் மொழிக்கும் இடையே போட்டி இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என தெரிவித்தார்.
அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாக திகழ்கிறது என தெரிவித்த அமித் ஷா,
குஜராத்தி, மராத்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளும் இந்திக்கு வலிமை அளிப்பதாகவும் அதேபோல ஹிந்தியும் வலிமை அளிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.