அமெரிக்காவில் இருந்து வந்த அழைப்பு?..ஒரே அறிக்கையில் முடித்து விட்ட DKS.. செம பல்பு வாங்கிய கர்நாடகா
நவம்பர் 5ல் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்காக பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா...
குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும்...ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிசும் மோதவுள்ள நிலையில்...அமெரிக்கா மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளனைத்தும் உற்று நோக்கி வருகின்றன...
இந்த சூழலில், நாளை ட்ரம்ப்பும் கமலாவும் விவாத நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்...
அரசியலுக்குள் நுழையும் முன் வழக்கறிஞராக இருந்த கமலாவுக்கு விவாதம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி...
அதே சமயம்...விவாதத்தில் அமெரிக்க அதிபர் பைடனையே கதிகலங்க வைத்தவர் ட்ரம்ப்...
நீயா?நானா? என்ற போட்டிதான் இருவருக்கும்...
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் கலந்து கொள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்ததன் பேரில் சிவக்குமார் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது...
அமெரிக்கா சென்று அவர் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவையும் சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது...
இந்தத் தகவல்கள் தீயாய்ப் பரவி இந்தியாவே பரபரத்தது...
இந்த சூழலில் இதன் உண்மை தன்மை குறித்து அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...
"அதிபர் தேர்தல் விவாதத்திற்காக அமெரிக்கா செல்வதாக உலா வரும் தகவல் உண்மையில்லை...நான் சொந்த காரணத்திற்காக... குடும்பத்துடன் செப்டம்பர் 15 வரை அமெரிக்கா செல்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார் டி.கே. சிவக்குமார்...
மேலும் காங்கிரஸ் தலைமைக்கு தனது அமெரிக்க பயணம் குறித்து எழுதிய கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்...
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் சிவக்குமார் கலந்து கொள்ள உள்ளதாக மகிழ்ந்திருந்த தொண்டர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்...