அதிமுகவில் மீண்டும்? மொத்தமாக திரும்பி பார்க்க வைத்த ஓபிஎஸ் டீம்

Update: 2024-10-09 06:40 GMT

அதிமுக ஒன்றிணையவேண்டி மதுரை பூங்கா முருகன் கோயிலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழிபாடு நடத்தினர். முதலில், மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட தொண்டர் ஒருவர், அதிமுக ஒன்றிணைய வேண்டி அந்த இடத்திலேயே அங்கபிரதட்சணம் செய்தார். இதனையடுத்து பூங்கா முருகன் கோயிலுக்கு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டி தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்