நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் கணவருக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.82 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்ததாக, திருச்செங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பொன்னுசாமியை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்..