மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொள்ள வந்த நிலையில், திடீரென மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் செல்லூர் ராஜுவும், அதிமுக வேட்பாளர் சரவணனும் கலந்து கொண்ட நிலையில், உயர் மின்னழுத்தத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது... மின்சாரம் இல்லாததால் விழாவுக்கு வந்த நடிகை விந்தியா காரில் இருந்து இறங்கவில்லை. மின்சாரம் இல்லாமலேயே செல்லூர் ராஜுவும், சரவணனும் அலுவலகத்தைத் திறந்து வைத்து விட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்...