"ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் பலாத்காரம்.." கொந்தளித்த பா.வளர்மதி

Update: 2024-09-24 12:39 GMT

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து அதிமுக மகளிர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, கோகுல இந்திரா முன்னிலையில் இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில், ஒவ்வொரு இரண்டு மணி நேரதிற்கும் ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஆளும் திமுக அரசின் மீது குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்களை தடுக்க கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்