அனுமதியின்றி பேரணி நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அ.தி.மு.க.வினர்
நீலகிரி மாவட்டம் உதகையில் அனுமதியின்றி பேரணி நடத்தி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த அ.தி.மு.க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க மாநாடு வெற்றி பெறுவதற்காக, உதகை காபி ஹவுஸ் சந்திப்பிலிருந்து மாரியம்மன் கோயில் வரை அ.தி.மு.க.வினர் பேரணியாகச் சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து அனுமதி இன்றி பேரணியாகச் சென்ற நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத், நகர செயலாளர் சண்முகம் உட்பட முக்கிய நிர்வாகிகள் மீது உதகை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.