"பிரதமர் மோடி ஆட்சியில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு 30% மட்டுமே" - ஹர்தீப் சிங் பூரி விளக்கம்

இந்தியாவில் எரிபொருள் மீதான சுமை மத்திய மாநில அரசுகளிடையே சமமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-04-30 02:48 GMT
பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் 30 சதவிகிதம் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   இந்தியாவில் எரிபொருள் மீதான சுமை மத்திய மாநில அரசுகளிடையே சமமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் துறையில் மத்திய அரசு தனக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 19.56 டாலரிலிருந்து 130 டாலராக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இப்போதைய சூழலில் பூஜ்யம் புள்ளி இரண்டு சதவிகிதம் கச்சா எண்ணெய் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப் படுவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்