பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சி, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்(I-PAC) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Update: 2022-04-25 12:04 GMT
 தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முடிவு செய்துள்ளது. ஏற்கொனவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஐதராபாத் சென்ற பிரசாந்த் கிஷோர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர்களில் ஒருவரான கே.டி. ராமா ராவ்(KT Rama Rao) தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்