அமித்ஷா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் மற்றும் கைது செய்ய வலியுறுத்தி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கர்நாடகாவில், ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.
கர்நாடகாவில் சிவில் கான்ட்ராக்டரான சந்தோஷ் பாட்டீல், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் லஞ்சம் கேட்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதை மறுத்த ஈஸ்வரப்பா சந்தோஷ் பாட்டீல் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தோஷ் பாட்டீல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தன் மரணத்திற்கு ஈஸ்வரப்பா கொடுத்த தொல்லை தான் காரணம் என 'வீடியோ' பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது கர்நாடகாவில் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்ல முன்பு இளைஞர் காங்கிரஸ் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் மேலும் அவரது கைதுசெய்யப்பட்டு தக்க நடவடிக்கை செய்ய வேண்டும் என கோஷங்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.