டெல்லி திமுக அலுவலகம் இன்று திறப்பு

டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Update: 2022-04-01 23:08 GMT
டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 30ஆம் தேதி டெல்லி வந்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், டெல்லியில் திமுக அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்